தாமரை கோபுரம் நாளை (15) முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நுழைவுச்சீட்டு புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நுழைவுச்சீட்டு போலியானது என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் ட்விட்டர் பதிவின் ஊடாக குறிப்பிட்டுள்ளது