எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!


 நாட்டில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலையை கணக்கிடும் சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 246 ரூபாயினால் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தற்போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் 4,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும், உணவகங்களில் உணவு விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK