கொரியாவில் வேலை வாய்ப்பினை எதிர்பார்ப்போருக்குக்கான அறிவிப்பு


 NVQ சான்றிதழ் என அழைக்கப்படும் தொழில்சார் தகைமை இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை குறிப்பிட்டார்.

பொருத்துதல் மற்றும் அரைத்தல் போன்ற தொழில்வாய்ப்புகளுக்கு குறித்த சான்றிதழ் அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப கட்ட வேதனமாக எட்டரை இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொரிய மொழியில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் குறித்த தொழில்களுக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரியாவிற்கு தொழில்வாய்ப்புக்களுக்காக செல்வோருக்கு அரச வங்கிகளால் கடன் வழங்கும் திட்டம் ஒன்றும் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK