QR கோட்டா முறை தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு


 தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் அமுல்ப்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, அடுத்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தவரை தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் விநியோக அட்டை QR முறை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்த முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK