நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,581 ஆக அதிகரித்துள்ளது.