சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தத் தேவையில் 25% மாத்திரமே சந்தைக்கு வெளியிடப்படுவதாக அச்சங்கம் கூறியுள்ளது.

இந்தியா தற்காலிகமாக ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் அங்கிருந்து இலங்கைக்கு மாவை கொண்டு வரும் வர்த்தகர்கள் மாவின் விலையை 350 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.

இந்த செயற்பாடு வருந்தத்தக்கது என தெரிவித்த அச்சங்கம், இந்நிலை தொடர்ந்தால் பணினை கூட 250 முதல் 300 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.