நாளை முதல் மின் துண்டிப்பு காலம் குறையும் சாத்தியம்


நாளை( திங்கட்கிழமை) முதல் மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதோடி 300 மெகாவொட் மின்சாரம், தேசிய கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான, பின்னணியில், மின்தடை அமுலாக்கப்படும் காலம் குறித்து அறியப்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதோடு மின்துண்டிப்பு கால அளவில் திருத்தம் செய்து விரைவில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துவதாகவும் குறிபிடப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK