அரச அதிகாரிகளுக்கான முக்கிய சுற்றறிக்கை வெளியானது


 
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. 


அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து அனுப்பும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் வழங்குவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கடமை கடிதங்களுக்கும் பதில் அனுப்பும் போது சம்பந்தப்பட்ட கடிதத்தின் கையொப்பத்திற்கு கீழே பொறுப்பான பணியாளர் அதிகாரியின் நேரடி தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK