விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

48 பொருட்களுக்கான நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு


 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என அதில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும் பொருட்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூலப்பொருட்களின் சிக்கல் அல்லது பிற நியாயமான உற்பத்தி சிக்கல்கள் இல்லாவிட்டால், பொருட்களின் உற்பத்தியாளர்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை பராமரிக்க வேண்டும்.

அச்சிடப்பட்ட அல்லது இலத்திரனியல் பற்றுச்சீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், பற்றுச்சீட்டின் பிரதியொன்றை விற்பனையாளரிடம் வைத்திருக்க வேண்டும் எனவும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK