இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஒரு லீற்றர்  டீசல் விலை அண்மையில் 10  ரூபாவினால குறைக்கப்பட்டுள்ளதையடுத்து  பஸ் கட்டணம்   இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்   நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

இதன்படி  குறைக்கப்படும்  பஸ் கட்டணம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.