முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடுதிரும்ப உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை நாட்டிற்கு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.