அருட் தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை


 சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, அருட்தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே, அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதவான், நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK