தேங்காய்க்கு தட்டுப்பாடு?


நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேங்காய்களை ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK