நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புங்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற சிறப்புக் குழு முன்மொழிந்துள்ள தேர்தல் முறை திருத்தங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இது தொடர்பாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.