மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து இப்போது தபால் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது . ரூ.15 ஆக இருந்த சாதாரண தபால் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அதேவேளை ரூ. 45 ஆக இருந்த பதிவு தபால் கட்டணம் ரூ.110 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 250 கிராம் எடையுள்ள தபால் பொதிக்கான கட்டணம் ரூ.200 உயர்த்தப்படும்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது.