விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி


 முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிசக்தி அமைச்சு காஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி முழு நேர அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 40 ஆயிரம் மெட்றிக் டொன் அடங்கிய மசகு எண்ணெய் கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.


குறித்த கப்பலின் வருகையின் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK