தேநீர் விருந்துக்கான செலவை ஜனாதிபதி ஏற்றார்


 பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் வைபவத்துக்கான முழு செலவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


இவ்வாறு அன்றைய தேநீர் விருந்துக்கு செலவிடப்பட்ட 272,000 ரூபா ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி மிக்க காலப்பகுதியில் அரசாங்க செலவினங்கள் குறைந்த பட்சமாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin