2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக செய்முறை பரீட்சையில் தோற்றாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் 0718 15 67 17 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது slexamseo@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.


10ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.