"கோட்டாபய பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது" ரணில் பகிரங்கம்


ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

"கோட்டாபய பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது" ரணில் பகிரங்கம்

ரணில் விக்ரமசிங்க  இலங்கையின் பிரதமராகஜனாதிபதியாக  கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

எனினும், அவரது நியமனம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது, ஏனெனில் அவர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க எனினும், அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கோட்டாபய பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது" ரணில் பகிரங்கம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருள் கட்டுப்படியாகாததாகி விட்டன.

சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்து உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.

இதனை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசிய நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ரணில் விக்ரமசிஙவை  ஐனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.       

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK