மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் – அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் நாமல்முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறினார்.

முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எதிர்ப்பாளர்கள் கடற்படைத் தளத்தில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK