அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனுவில் கையொப்பம் பெற்றுள்ளார்கள் என்று கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதுதொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், நமது FLASH NEWS இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான கையெழுத்து திரட்டும் பணி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டொரு தினங்களில் அந்த பிரேரணையை சபாநாயகரிடம் நாங்கள் கையளிப்போம்.
இந்தப் பிரேரணை மூலம் பல அரசியல் கட்சிகளின் உண்மையான வடிவத்தை மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று அவர் எம்மிடம் தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK