உலங்கு வானூர்தியில் தப்பிச்சென்ற அரசியல் பிரமுகர்?

கேகாலை பகுதியில் இன்று காலை அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கேகாலை - சுதந்திரமாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​தனியார் விமான சேவைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் உலங்கு வானூர்தியில் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறித்த உலங்கு வானூர்தி கேகாலையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் இல்லமும் கேகாலை மாநகர சபை விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்



Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK