ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது - இம்ரான்



ஒழுக்காற்று நடவடிக்கை முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஞாயிற்றுகிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.இருபதாம் திருத்த சட்டத்தின் பின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள் 

ஆனால் வழங்கப்பட்டதோ தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகள்.மீண்டும் நிதி சட்டமூலம்,வரவுசெலவு திட்டம் போன்றவற்றில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை என்றார்கள்.

நான்கு மாதங்களாக ஒன்றுமில்லை. ஆனால் 

இன்று அவர்கள் பசில் ராஜபக்சவுடன் அமைச்சுக்களுக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் பிரதி சபாநாயகர் வாக்களிப்பில் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வாக்களிக்காவிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் 

வரவு செலவு திட்டத்தின் பின்னர் கூறிய ஒழுக்காற்று நடவடிக்கையையே இன்னும் காணவில்லை. 

இதில் தற்போது புதிதாக ஒன்று 

அமைச்சு பதவிகளுக்கு பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் எவ்வாறு எதிர்கட்சிகளுடன் இணைந்து வாக்களிப்பார்கள்.


இது ஒன்றும் ஹக்கீமுக்கு தெரியாமலில்லை.மக்களை ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் அவரும் ஏமாற்றி வருகிறார். என்பதே உண்மை. ராஜபக்சக்கள் எவ்வாறு சிங்கள மக்களை ஏமாற்றி வந்தனறோ அதிபோன்றே முஸ்லிம்களை இந்த முஸ்லிம் கட்சி தலைவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK