பிரியந்த குமார கொலை வழக்கு; பாகிஸ்தானில் 6 பேருக்கு மரண தண்டனை

 


7 பேருக்கு ஆயுள் தண்டனை; 76 பேருக்கு 2 வருட சிறை

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அந்நாட்டு நீதிமன்றத்தினால் 6 பேருக்கு மரண தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 03ஆம் திகதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, கொலைசெய்து, அவரது உடலை எரித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

இந்தச் சம்பவத்தில் பிரியந்த குமார தியவதன எனும் இலங்கையரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.


மதத்தை நிந்தனை செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக 100,000 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 2.2 கோடி) வழங்க, சியல்கோட் வர்த்தக சமூகம் வழங்கியிருந்தது.

இதேவேளை, உயிரிழந்த பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவர் பெற்று வந்த சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கும் சியல்கோட் வர்த்தக சமூகம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK