கொழும்பில் நேற்று (23.03.2022 ) நடைபெற்ற நான்காவது இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் போது பின்வரும் அறிக்கை இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் வெளியிடப்பட்டுள்ளதாக, இலங்கை வெளி விவகார அமைச்சு அறிவித்துளள்ளது.
பொருளாதார செழுமை, நிலையான அபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான தமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் புதுப்பித்து, இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் நான்காவது அமர்வை இலங்கையும், ஐக்கிய அமெரிக்காவும் 2022 மார்ச் 23ஆந் திகதி இலங்கையின் கொழும்பில் கூட்டின. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சக ஜனநாயக நாடுகளாக பகிரப்பட்ட மதிப்புக்களில் உறுதியாக வேரூன்றி, கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயல்படும் தமது நோக்கின் அடிப்படையில், இருதரப்பு உறவுகளுக்கான தமது உறுதிப்பாட்டை இரண்டு பிரதிநிதிகளும் மீண்டும் உறுதிப்படுத்தினர். கோவெக்ஸ் உடன் இணைந்து 3.4 மில்லியன் தடுப்பூசிகளையும், மற்றும் கடந்த ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்குத் தீர்வு காண்பதற்காக 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான சுகாதார உபகரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் வழங்கியமைக்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு இலங்கை தனது ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிப்படுத்தியது.
ஏற்கனவே இலங்கை உற்பத்திகளின் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக ஐக்கிய அமெரிக்கா உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட இரண்டு பிரதிநிதிகளும் சந்தை அணுகல், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களை ஆராய்வதற்கான தமது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினர். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐக்கிய அமெரிக்கா வெளிப்படுத்தியது. அந்த நோக்கத்திற்காக, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கடன் வசதியை 265 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ள ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பங்கை இலங்கை வரவேற்றது. குறிப்பாக பெண் தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இலங்கையில் முதலாவது வர்த்தக முடுக்கியை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிதியுதவியை இலங்கை பாராட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு உறுதிபூண்டுள்ளன. 2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 70 வீத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், 2050ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலையை அடைந்து கொள்வதற்குமான இலங்கையின் இலக்கை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. ஐந்தாண்டு 19 மில்லியன் டொலர் இலங்கை எரிசக்தித் திட்டம் மற்றும் மிதக்கும் சூரிய ஆலைக்கான ஆதரவு உட்பட, இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவியாக நடைபெற்றது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK