இன்றைய தினமும், நாடளாவிய ரீதியில் மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன் P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில், முற்பகல் 10.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும்
மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK