உள்நாட்டுக்கும்,வௌிநாட்டிலும் கிராக்கியுள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதனூடாக தற்போது தேடியலையும் டொலரை காலடியில் கொண்டு வரமுடியுமென்றும்,இந்த உற்பத்திகள் உள்நாட்டில் தன்னிறைவு அடைந்தால் இலங்கை ரூபாவின் பெறுமதி சர்வதேச சந்தையில் உயருமென்றும் தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமா ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவிவித்தார்.இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கையில் வாழ்ந்து கொண்டு வௌிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய டொலரின்றி அலையும் அவலம் ஏற்பட்ட நிலைமைகள் பற்றியும் அவர் இங்கு விளக்கமளித்தார்.
அக்கரைப்பற்று மநாகர சபையின் கேட்போர் கூடத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தேசிய காங்கிரஸ் தலைவர் கூறியதாவது,
இறைவனின் அருள்சொரியும் இலங்கையில் எந்த வளங்களும் இல்லாமலில்லை.நீர்,நிலம்,காடு,கடல் விலங்கு மற்றும் மூலப் பொருட்கள் உள்ளிட்ட சகலவையும் இங்குள்ளன.இவற்றைக் கொண்டு உணவுத் தேவையையும் எமது நுகர்வுகளையும் எம்மால் உற்பத்தி செய்ய முடியும்.வௌிநாடுகளின் பொருட்களுக்கு அடிமையாகிப்போன எம்மால், உள்நாட்டு உற்பத்தி,சுய நுகர்வுகளின் சாத்தியத்தை சிந்திக்க முடியாமல்போயுள்ளது.இதற்கான காரணம், சொகுசு கலந்த இற்ககுமதிப் பொருளாதாரமே! உழைப்பது செலவழிப்பது என்றில்லாமல் உற்பத்தி செய்வது சேமிப்பது என்ற புதிய பொருளாதார முறைகளைச் சிந்திக்கும் தருணத்தையே இன்றைய நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ளன. பணமிருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்கான காரணம். இதனால் பணம் பெறுமதியிழந்து வெறும் காகிதமாக பார்க்கப்படும் நிலையே ஏற்பட்டிருக்கிறது. பாலுற்பத்தி, பழச் செய்கை,மற்றும் சேதன எரிபொருள் பாவனைகளால்,டொலரின் தேவையை இல்லாமலாக்க முடியும். கடின உழைப்பால் மாத்திரமே இவை சாத்தியப்படும். இதனால்,இலகு பொருளாதாரத்துக்கு அடிமைப்பட்டுள்ள மக்கள் இதன் சாத்தியங்களை உணராதுள்ளனர்.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்திய தீய சக்திகள், இன்று உண்மைகளை உணர்ந்து மௌனித்துள்ளதையும் எமது
வெற்றிகளாகவே பாரக்க வேண்டும்.அந்நிய சக்திகளின் பிடிக்குள் விழாமல் நாட்டைக் காக்கும் அரசியலையே தேசிய காங்கிரஸ் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK