எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரீச்சம் பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குறித்த வரியானது 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஒரு ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பேரீச்சம்பழ இறக்குமதியின்போது கிலோவொன்றுக்கு விசேட பண்டவரியாக ஒரு ரூபா மாத்திரமே அறவிடப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்திருந்தது.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.
எனினும், இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 40 மெட்ரிக் டன் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி அனுமதிப்பத்திர கட்டுப்பாட்டு முறைமையின் கீழ், பேரீச்சம்பழ இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நிதியமைச்சு மேற்படி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான பிரசாரங்கள் ஊடாக மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை புலப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK