அடுத்த வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு?


அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று(செவ்வாய்கிழமை) முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்