பிரதமர் மஹிந்தவின் உடல்நிலை தொடர்பில் அவரின் மகன் வெளியிட்டுள்ள விடயம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கோவிட்  ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார். அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கோவிட் வைரஸ் தொற்று இல்லை. அத்துடன் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும்  அவரது உடல்நலம் குறித்த வதந்திகள் பொய்யானவை என்றும் பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் ராஜபக்ச, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, இத்தகைய அறிக்கைகள் பொய்யானவை என்றும் பிரதமர் உடல்நலத்துடன் இருப்பதாக யோஷித ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த தொற்றுநோயை சமாளிக்க நாடு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் தவறான அறிக்கைகளை பரப்ப வேண்டாம் என்று தாம் பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் யோஷித தெரிவித்துள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்