பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலையின் சுமார் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பலபிட்டி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அதேபோல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் காலி நகர் பகுதியில் 12 கொவிட் தொற்றாளர்களும், ஹபராதுவையில் 15 பேரும், எல்பிடியவில் 11 பேரும், இமதுவ மற்றும் நியாகம ஆகிய பிரதேசங்களில் 10 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.