சம்மாந்துறை டிப்போ விவகாரம் ; அமைச்சரை சந்தித்து பேசி தீர்வுக்கு வழிசமைத்தார் ஹரீஸ் எம்.பி !


 (சர்ஜுன் லாபீர்)

சம்மாந்துறை டிப்போ விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ள விடயங்களை ஆட்சேபித்து சம்மாந்துறை டிப்போவை கல்முனையுடன் இணைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி இன்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தித்து பேசினார். 

இதன்போது சம்மாந்துறை டிப்போவானது அதிக இலாபம் ஈட்டும் ஒரு நிலையம் என்பதையும் அந்த பிரதேசத்தில் ஏன் இந்த டிப்போ தேவை அதன் அவசியங்கள் குறித்தும் விளக்கியதுடன் இது தொடர்பில் உடனடியாக சிறந்த தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதன்போது பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே அவர்கள் இது தொடர்பில் தான் எதுவும் அறிந்திருக்க வில்லை என்றும் இராஜாங்க  அமைச்சர் எடுத்த முடிவே இது என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் உரியவர்களிடம் தீர ஆலோசித்து நல்ல முடிவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தருவதாகவும் அதுவரை அவகாசம் தேவை என்பதை பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK