சமூகத்தில் மிக நீண்ட காலமாக வெற்றிகரமான பயணங்களை மேற் கொண்டு தமது வாழ் நாட்களில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனை பெண்களை கௌரவித்து அந்த சாதனை பெண்களின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிடுகின்ற பணியை செய்து வரும் ஸ்கை தமிழ் பணிப்பாளரும் 'துணிந்தெழு' வாராந்த ஒன்லைன் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான ஜெ.எம்.பாஸித் தலைமையிலான சஞ்சிகை குழுவினர் மகளிர் தினமான திங்கட்கிழமை கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனை கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவராலயத்தில் சந்தித்தனர். இதன்போது 'துணிந்தெழு' வாராந்த ஒன்லைன் சஞ்சிகை தொடர்பில் அதன் நிறுவுனர் ஜெ.எம்.பாஸித் மற்றும் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி ஸ்கை தமிழ் உதவி முகாமையாளரான நுஸைலா பதுர்தீன் ஆகியோருக்கு கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

சமூகத்தில் மிக நீண்ட காலமாக வெற்றிகரமான பயணங்களை மேற் கொண்டு தமது வாழ் நாட்களில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனை நாயகிகளை கௌரவித்து அந்த சாதனை நாயகிகளின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிடுகின்ற மிகப்பெரும் பணியை இச்சஞ்சிகை செய்ய ஆரம்பித்து இருக்கின்றது.

இது மத்திய கிழக்கு நாடான கட்டாரிலிருந்து இயங்கும் ஸ்கை தமிழ் நிறுவனத்தின் புதிய முயற்சி 'துணிந்தெழு' வாராந்த ஒன்லைன் சஞ்சிகை ஆகும். அரபு நாடொன்றிலிருந்து இப்படியான ஒரு தமிழ் சஞ்சிகை வெளிவருவது தமிழ் நெஞ்சங்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிட்டத்தக்கது.