20 க்கு ஆதரவளிப்பதற்கான கூட்டம் மு.க தலைவர் ரவூப் ஹக்கீமின் காணிவெல் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. அங்கு ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மு.க MP க்கள் அனைவரும் இருந்தோம்.

அந்த பேச்சுவார்த்தைக்கு பசில் ராஜபக்ஷவும் வருகை தந்தார். ரவூப் ஹக்கீமின் முழு சம்மதத்துடன் தான் 20க்கு ஆதரவு வழங்கினோம். நான் 20ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிக்கிறேன். நீங்கள் அதனை ஆதரித்து வாக்களியுங்கள் என பசில் ராஜபக்ஷவுக்கு முன்னால் ரவூப் ஹக்கீம் எமக்கு அனுமதி தந்தார்.

என மு.க பாராளுமன்ற உறுப்பினரும், 20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்த குழுவின் முக்கியஸ்தருமான ஹாபிஸ் நஸீர் Truth with Chamuditha என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்