ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பொது நிறுவனங்களுக்கான கோப் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆராயும் முகமாக நேற்று கோப் குழு கிரிக்கட் அதிகாரிகளை அழைத்திருந்தது.

எனினும் இதன்போது கிரிக்கெட் அதிகாரிகள் உரிய நிதிக்கணக்குகளை சமர்ப்பிக்க தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கணக்குகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.

அத்துடன் நிதி விடயங்கள் தொடர்பில் கோப் குழு எதிர்ப்பார்த்த விடயங்களை தெரிவிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தயாராக இருக்கவில்லை. இந்தநிலையில் சந்திப்பு நிறுத்தப்பட்டு ஒரு மாததக்காலத்துக்குள் மீண்டும் அறிக்கைகளுடன் கோப் குழுவின் முன் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டது.