பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட குறித்த பிரிவி அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 19 ஆவது சந்தேக நபரான தற்போது வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான படோவிட்ட லொகு என்பவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது வௌிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள காரணத்தினால் அவரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவ்வாறு திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.