கடந்த அரசாங்கத்தினால் 5 வருடங்களில் மேற்கொள்ள முடியாத பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டான் தெரிவித்துள்ளார்.

கண்டிக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ்; நட்ராஜ் தலைமையில் சர்வதேச இந்திய வம்சாவளி தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.