சதொச சேவையாளர்களை பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்போவதில்லை என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் வர்த்தக மற்றும் நுகர்வோர் நடவடிக்கைகளுக்கான அமைச்சராக கடமையாற்றிய போது சதொச சேவையாளர்களை மாற்று கடமைகளில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இலஞ்ம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து மேல் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.