அடிப்படைவாதிகளில்  கோரிக்கைகளுக்கு அரசு தலை சாய்க்க கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம்  செய்யும் தீர்மானம் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. ஒரு இனம்  மாத்திரம் அடக்கம் செய்ய அனுமதி கோருவது இந்த சந்தர்ப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை தோற்றுவிக்கும் .

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல பௌத்தர்கள் கிருஸ்தவர்கள் இந்துக்கள் என அனைவருக்கும்  இறுதிக்கிரியைகளின் போது மேற்கொள்ளும் சடங்குகளை செய்ய முடியாமல் போய் உள்ளது. அவர்கள் பொருமையுடன் உள்ளார்கள். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில அடிப்படைவாதிகளும் இந்த விடயத்தின் கையில் எடுத்துள்ளார்.

அடிப்படை வாதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இந்த அரசங்கத்தினை பௌத்த மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்து உருவாக்கவில்லை .. இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவினால் மரணிப்பவர்களை  தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.