இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறவுள்ளன..!


இரண்டு நாட்களாக மட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வானது இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக நான்கு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்தும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படுவதனை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது ஆராயப்பட்டது.

அதனடிப்படையில், இன்றும் நாளையும் அமர்வுளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

முற்பகல் 10 முதல் முற்பகல் 11 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வினாக்கள் பத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது தினமான நாளைய தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு யோசனை மீதான விவாதம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற பணிக்குழாமில் மேலும் 60 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இந்த பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் இன்று கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் 943 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவுப் ஹக்கிம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று அடையாளம் காணப்பட்ட ராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தடி சில்வா அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்ளவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன் இராஜாங்க அமைச்சருடன், அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் கொக்கலவில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தடி சில்வாவுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை தொடர்ந்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK