மார்ச் மாதம் இறுதிவரை மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படும்


இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் உயர்வடைந்து காணப்படுமென கூறப்படுகிறது. சந்தைகளில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் உயர்வடைந்து காணப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிவரையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படும் என ஹெக்டர் கோபேகாடுவா விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்த நிரம்பல் மற்றும் அதிக கேள்வி என்பன காரணமாக விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மரக்கறிகளின் விலை உயர்வுப்பட்டியலின் படி போஞ்சி- 220 ரூபா, கரட் -230 ரூபா, குடமிளகாய் - 450ரூபா, பச்சைமிளகாய்- 800 ரூபா, கத்தரிக்காய் -280 ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK