அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்


அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக முதலாவது ஆசிய வம்சாவளி பெண்ணான கமலா தேவி ஹாரிஸும் பதவியேற்றுள்ளனர்.

கமலா தேவி ஹாரிஸுக்கு லத்தீன் உயர்நிதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து அமெரிக்காவின் 46வது ஜனாதிபதி ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார்.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ரோபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடந்தது

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின் ஆதரவாளர்களால் குறித்த பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றன.

வழக்கமாக புதிய ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி வரவேற்பார்.

எனினும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1869 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமக்கு பின் பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆவார்.

அத்துடன் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன

பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கொவிட்-19 காரணமாக மரணித்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு நிகழ்வில் பங்கேற்றவர்களை கோரிய ஜனாதிபதி ஜோ பைடன் இது அமெரிக்காவின் நாள் எனவும் ஜனநாயகத்தின் நாள், வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள் எனவும் குறிப்பிட்டார்.

பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது.

ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம்.

ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK