கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்று ஏற்பட்டுள்ள வாத விவாதங்கள் அவசியமற்றது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஒரு நாட்டுக்கு ஒரே சட்டம், ஒரே வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு அரசாங்கங்களும் நடைமுறைப்படுத்தும் சட்டங்களை ஒவ்வொரு தரப்பினருக்கு தேவையான வகையில் மாற்றக்கூடாது.

அடக்கம் செய்வதற்கு எதிராக பிக்குமார் அமைதியான முறையில் குரல் கொடுப்போம். இந்த அமைதியை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அமைதியாக செயற்படும் நான் உட்பட தரப்பினரை தூண்டி விட வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.

தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி தூண்டி விட்டால் காட்டில் இருக்கும் புலியை தூண்டி விட்டது விதமான சம்பவங்கள் நேரிடக் கூடும்.

சடலங்களை அடக்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.