மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை சற்றுமுன்னர் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக 25 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கபபட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் கடந்த தினம் எற்பட்ட அமைதியின்மை தொடர்பில ஆராய்வதறகாக நீதி அமைச்சரால இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் கடந்த 03 ஆம் திகதி முதன்முறையாக மஹர சிறைச்சாலைக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது