கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவு !


கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இலங்கையில் மேலும் 704 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 925 ஆக காணப்படுகின்றது.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 937 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 620 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post