விபத்தில் ஒருவர் பலி!


(அஸீம்  கிலாப்தீன்)
நேற்றிரவு (12) 7.45 மணியளவில் கெகிராவை, தம்புள்ளை வீதியின் சூரியகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெகிராவையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post