அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை


(இஹ்ஸான் ஜவாஸன்)

2020 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகளின் பிரகாரம்  குருணாகல் மாவட்ட தித்தவெல்கால பிரதேச அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று மாணவர்கள் சித்தியடைந்து இருப்பதுடன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளனர்.

எம்.ஏ.எம்.அப்றி  179 புள்ளிகளையும் ஆர்.எம்.றஸ்பா ஹானி  171 புள்ளிகளையும் ஏ.டபிள்யூ.ஸப்னம் சீறாஷ்  167 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் இப்பாகமுவ கல்வி வலயத்தில் பாடசாலை தரப்படுத்தலில் சிறந்த இடத்தையும் அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயம்  பெற்றுக்கொண்டது.

சித்தியடைந்த மாணவர்களுடன் கற்பித்த  ஆசிரியை யூ.எல்.ஷிமாறா மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் அஷ்ஷைக் எம். எம்.றூமி (காஸிமி)  பாடசாலையின் அதிபர் அஷ்ஷைக் ஏ.எஸ்.எம்.மஸாஹிம் (நளீமி) ஆகியோரையும் படத்தில் காணலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post