-திருகோணமலை நிருபர் பாருக்-
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வான் ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசேட பொலிஸ் அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரவ்பொத்தான - வெலியுமபொத்தான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவருகின்றது.
தப்பியோடிய குறித்த நபர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Post a Comment