லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது .

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற கன்டி டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய கன்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 157 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய தம்புள்ள வைக்கிங் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ள வைக்கிங் அணியின் அஞ்சலோ பெரேரா தெரிவானமை குறிப்பிடத்தக்கது.