கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது பற்றி எதிர்வரும் பத்து நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையையும், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகல தரப்பினரும் ஒததுழைப்பு வழங்கினார்கள்.
அதேபோன்று சாதாரண தரப் பரீட்சையையும் நடத்துவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிடுகையில், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin